கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் ஏராளமான மாடுகள் விற்பனை !

கருங்கல்பாளையத்தில் நேற்று கொண்டு வரப்பட்ட மாடுகளில் 85 சதவீத மாடுகள் விற்பனை ஆனது என சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.;

Update: 2024-03-21 10:23 GMT
கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் ஏராளமான மாடுகள் விற்பனை !

மாட்டு சந்தை

  • whatsapp icon
ஈரோடு கருங்கல்பாளையத்தில் வியாழன் தோறும் நடைபெறும் வழக்கமான சந்தை கூடியது. இந்த சந்தைக்கு ஈரோடு, கோவை, கரூர், சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். 780 பசுமாடுகள், 460 எருமை மாடுகள் என மொத்தம் 1240 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் பசு மாடு ஒன்று ரூ.48 ஆயிரம் முதல் ரூ.81 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.36 ஆயிரம் முதல் ரூ.72ஆயிரம் வரையிலும் விலை போனது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து, விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி மாடுகளை வாங்கி சரக்கு வாகனங்களில் ஏற்றி சென்றனர். வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்ததால் நேற்று கொண்டு வரப்பட்ட மாடுகளில் 85 சதவீத மாடுகள் விற்பனை ஆன சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News