தம்மம்பட்டி பகுதியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
சேலம் மாவட்டம்,தம்மம்பட்டி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-05-24 16:01 GMT
லாட்டரி விற்பனை
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பஸ் நிலைய பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் பஸ் நிலைய பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டு விற்ற தம்மம்பட்டி முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் மகபூப் மகன் பாபு (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.