லாட்டரி சீட்டு விற்றவர் கைது
ஆத்தூர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.;
Update: 2024-02-18 08:52 GMT
கைது
ஆத்தூர், உடையார்பாளையம் காந்திரோடு பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவருடைய மகன் பிரபு இவர் தனது செல்போன் மூலம் ஆன்லைனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து 'ஆத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அவரை நேற்று கைது செய்தார். அவரிடம் இருந்து 1,800 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.