காதல் திருமணம் செய்த ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் !
காதல் திருமணம் செய்த ஜோடி வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-27 07:35 GMT
காதல் திருமணம்
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த நேமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 24). இவர் ஓசூரில் தங்கி கேட்டரிங் வேலை செய்து வருகின்றார். அப்போது இவருக்கும், பெங்களூருவைச் சேர்ந்த தனுஷா (20) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் காதலிக்கும் தகவல் பெற்றோர்களுக்கு தெரிந்ததால் இருவரையும் கண்டித்து வைத்தனர். பெற்றோர்கள் எதிர்ப்பால் இவர்கள் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி, ஏலகிரி மலையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பெற்றோருக்கு பயந்து பாதுகாப்பு கேட்டு நேற்று காலை வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் கழுத்தில் மாலையுடன் திருமண கோலத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து இரு வீட்டாரின் பெற்றோர்களை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.