வெறி நாய்கள் தொல்லை - நாய் முகமூடி அணிந்து வந்த கவுன்சிலர்

தென்காசி நகராட்சி பகுதியில் நிலவும் வெறி நாய் தொல்லையை கட்டுப்படுத்த கோரி காங்கிரஸ் உறுப்பினர் ரபீக் நாய் முகமூடி அணிந்து வந்து நகர் மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.

Update: 2024-02-19 04:44 GMT
நாய் முகமூடியுடன் கவுன்சிலர் ரபீக் 
தென்காசி மாவட்டம், தென்காசி நகராட்சி கூட்ட அரங்கில் நகர்மன்ற தலைவர் சாதிர் தலைமையில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 33 வார்டு பகுதிகளில் இருந்தும் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிலையில் கூட்டத்தில் மன்ற பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து தென்காசி சுற்றுவட்டார பகுதிகளான கொடிமரம், மவுண்ட் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெறிநாய்கள் தொந்தரவு அதிகரித்து காணப்படுகிறது. இதனை சுட்டிக்காட்டும் வகையில் 20 வது வார்டை சேர்ந்த காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர் முகமது ரபிக் நாய் முகமூடி அணிந்து நகர் மன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு முதியவர் ஒருவரை நாய் கடித்து குதறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, தொடர்ந்து பொதுமக்கள் சாலைகளில் சுதந்திரமாக செல்ல முடியாத நிலையில் அச்சத்தோடு நடந்து வருகின்றனர். இதனை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் செயல்பட்டு வருவது வேதனை தெரிவிப்பதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாய் முகமுடியுடன் நாய் குறைக்கும் சத்தத்தை எழுப்பி நகர் மன்ற தலைவரிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.
Tags:    

Similar News