வைகை ஆற்றில் திமுக அட்டூழியம் - பாஜகவினர் பரப்பரப்பு புகார்

வைகை ஆற்றில் திமுகவினர் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக புகார்

Update: 2024-03-20 19:07 GMT

வைகை ஆற்றில் மணல் கொள்ளை என புகார்

மதுரை விளாங்குடி பகுதி வைகை ஆற்றில் திமுகவை சேர்ந்த சிலர் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக பாஜக நிர்வாகி போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.

அதில், விளாங்குடி பகுதியில் பல வருடங்களாக மணல் கொள்ளை அதிகரித்து வருவதால் மணல் கொள்ளையில் ஈடுபடுவோரிடையே சண்டை, கொலைவெறி தாக்குதல் நடப்பதும், புகார் அளிக்க செல்வோரிடம் போலீசார் ஸ்டேஷன் வெளியிலேயே சமரசம் பேசி அனுப்பி விடுகின்றனர். பரவை ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் ஆற்றங்கரை பகுதியில் சுமார் 2 கி.மீ.,க்கு இந்த மணல் கொள்ளை நடக்கிறது.

அப்பகுதியில் உள்ள கட்டிடங்களுக்கு தேவையான மணல் வைகை ஆற்றின் கரையில் அள்ளி விற்பனை செய்கின்றனர். இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்படுகிறது. போலீசாருக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் தெரிந்தும் அவர்களுக்கு கமிஷன் செல்வதால் மணல் கொள்ளை பற்றி அவர்கள் கண்டு கொள்வதில்லை.

இளைஞர்கள் கொள்ளையில் ஈடுபடுவோரிடம் தட்டி கேட்டால் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே இது போன்ற மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மணல் கொள்ளையில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News