”நாங்கள் அன்புக்கு மட்டும் தான் அடிமை” - திமுகவை சாடிய எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பா

”அதிமுக கொள்கை ரீதியாக எப்போதும் யாருக்கும் அடிமையாக இருந்ததில்லை”

Update: 2024-02-25 11:47 GMT

எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா

நாங்கள் அன்புக்கு மட்டும் தான் அடிமை, கொள்கை ரீதியாக எப்போதும் யாருக்கும் அதிமுக அடிமையாக இருந்ததில்லை சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் 16ஆம் கால் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மற்றும் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்கிற செல்வம் மற்றும் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து கூலி தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கூறுகையில், “கடந்த நான்கு நாட்களாக சட்டமன்றம் நடைபெற்று முடிந்திருக்கிறது நிதிநிலை அறிக்கைகள் வந்திருக்கிறது எங்களது கோரிக்கைகள் பற்றி பல தகவல்கள் வரவில்லை எங்களது கருத்துகளுக்கு சரியான பதிலை திராவிட முன்னேற்ற கழக அரசும் அமைச்சர்களும் முதலமைச்சரும் தெளிவாக சொல்லவில்லை.

எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என்பது தான் மீண்டும் மீண்டும் அழுத்தமாக சொல்கிறோம் குறிப்பாக பல்வேறு திட்டங்கள் அறிவிப்போடு உள்ளது. இதுதான் திமுகவின் பெரிய விமர்சனமாக உள்ளது. திமுக அறிவிப்பை மட்டும் தான் வெளியிடுகிறது. வேறு எதையும் வெளியிடவில்லை விரிவாக்கப்பட்ட பகுதிக்கு பாதாள சாக்கடை திட்டத்தை இரண்டு முறைக்கு முன்னாடி அறிவித்தார்கள். எதுவும் நடைபெறவில்லை, மெட்ரோ ரயில் திட்டம் கடந்த நிதி அமைச்சர் அறிவித்தார், ஆனால் இதுவரை நடைபெறவில்லை.

அவனியாபுரத்தில் இருந்து நெல்பேட்டை வரை உயர்மட்ட பாலம் சொன்னார்கள் இதுவரை அறிவிக்கவில்லை. திருப்பரங்குன்றம் கோவிலில் கும்பாபிஷேகம் அம்மாவின் அரசிலே 2011 ஆம் ஆண்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருக்கோயிலில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும்.  ஆனால் இன்னும் திருக்கோவில் குடமுழுக்கு நடத்தப்படாமல் 13ஆண்டுகளாக தள்ளிப் போயிருக்கிறது. தொடர்ந்து அமைச்சர்களிடம் இந்த வேண்டுகோளை விடுத்திருக்கிறோம். முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆகம விதிப்படி குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும்.   ரோப் கார் சிஸ்டம் அறிவிப்போடு நிற்காமல் விரைவாக செயல்படுத்த வேண்டும் போன முறை அருமை அண்ணன் தங்கம் தென்னரசு தொழில் துறை அமைச்சராக இருந்தபோது டைட்டில் பார்க் அறிவித்தார்.

இப்போது நிதியமைச்சர் ஆகிவிட்டு இப்போது அதே டைட்டில் பார்க்கை அறிவிப்புதான் கொடுக்கிறாரே தவிர ஆக்கபூர்வமான அடித்தளமான பணிகள் இதுவரை நடைபெறவில்லை. மதுரைக்கு மிகப்பெரிய திட்டங்கள் கொண்டுவரவில்லை ஒரே ஒரு நூலகம் ஜல்லிக்கட்டு அரங்கத்தை தவிர மதுரை மாவட்டத்திற்கு எந்த திட்டங்களையும் கொடுக்கவில்லை . இந்த முறை அறிவித்திருக்கிறார்களே தவிர நிறைவேற்றுவர்களாக என்பது தெரியவில்லை. இதற்கிடையில் தென்கால் கன்மாய் வண்டியூர் கன்மாயும் ஏற்கனவே நீதி அரசர்கள் நேரில் ஆய்வு செய்து கண்மாயிகள் ரோடு என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை சொல்லி இடைக்கால தடை விதித்தார்கள்.

அந்த இடைகால தடையை நீக்குவதற்கும் திருப்பி மாற்று வழி அமைப்பதற்கும் நீர்த்தேக்கத்தை பாதிக்காத அளவிற்கு ஒரு திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுப்பணித்துறை அமைச்சரிடம் கேட்டுள்ளேன். அதற்கான பலன்களை உடனடியாக சொல்வதாக அறிவிப்பு கொடுத்துள்ளனர். இன்றைக்கு எதிர்க்கட்சிகள் எல்லாம் தங்களது திட்டங்களை சொல்லி வாக்கு கேட்காமல் அடிக்கடி அமைச்சர் கூட்டத்தையும், மாவட்ட செயலாளர் கூட்டத்தையும் போட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர அவர்கள் முறையான கழகப் பணியை தவிர மக்கள் பணியை ஆற்ற தவறி இருக்கிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின் அடிக்கடி அதிமுகவினரை அடிமை என்று குறிப்பிடுவது குறித்த கேள்விக்கு : எதுக்கு அடிமை சொல்லுங்க நாங்கள் அன்பு அன்புக்கு அடிமை புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் அன்புக்கு அடிமை மற்றபடி கொள்கை ரீதியாக யாருக்கும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எப்போதும் அடிமையாக இருந்ததில்லை. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து எடப்பாடி யார் காலத்தில் இருந்து இன்றைக்கு அதிகாரம் படைத்த பிஜேபியை எதிர்த்திருப்பாரா நாங்கள் தான் சொன்னோம்.

உங்களது கூட்டணியில் இருந்து ஒதுங்கிக்கிறோம் இந்த கூட்டணி கொள்கை பிடிப்பு மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து உள்ளது. ஆகவே முதல்முறையாக எடப்பாடி யார் துணிந்து சொன்னார் இன்றைக்கு திமுக சொல்ல முடிகிறதா ஒரு காலத்தில் பிஜேபியுடன் கூட்டணியில் இருந்து ஆட்சி பீடத்தில் இருந்தார்கள் எல்லாருடைய மனப்பார்வையிலும் திமுக தேவைப்பட்டால் பிஜேபியுடன் சேர்ந்து கொள்வார்கள். பத்து தொகுதி நாடாளுமன்றத்தில் திமுக ஜெயித்தால் பிஜேபியுடன் சேர்ந்து விடுமோ என்று சந்தேகப்படுகிறார்கள். அந்த அளவுக்கு அவர்களது ஒட்டும் உறவு உள்ளது. எப்போது வேண்டுமானாலும் திமுக மாறிவிடும் அது அவர்களின் வாடிக்கையான வழக்கம். ஆகவே எடப்பாடியார் குறுகிய காலத்திலேயே ராஜ தந்திரத்துடன் முடிவெடுத்து வெற்றி கண்டுள்ளார் தொடர்ந்து வெற்றி காண்பார்” என்றார். 

Tags:    

Similar News