பழனியப்பனூர் கிராமத்தில் உள்ள தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா

பழனியப்பனூர் கிராமத்தில் உள்ள தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..

Update: 2024-07-05 09:33 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் பழனியப்பனூர் இந்து கொங்கு நாடார்களுக்கு பாத்தியப்பட்ட, ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ எட்டுகை அம்மன், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ வள்ளி தேவசேனா, சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி, ஸ்ரீ கருப்பனார், ஸ்ரீ கடகடப்பான் ஆகிய ஆலயங்களில் புனராவர்தன ஜூரனோர்தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 23ம் தேதி காலை 9 மணிக்கு முகூர்த்தகால் மற்றும் முளைப்பாலிகை இடுதல் நடந்தது. கடந்த 1ம் தேதி இரவு 9 மணிக்கு மேல் கிராம சாந்தி பூஜை நடைபெற்றது. கடந்த 2ம் தேதி காலை 6 மணிக்கு மேல் மங்கல இசை ஸ்ரீ மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமத்தை தொடர்ந் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 8 மணிக்கு சிங்களாந்தபுரம் களத்து மேட்டில் இருந்து காவிரி தீர்த்தம் எடுத்து வர செல்லுதல் நடைபெற்றது. மாலை 2 மணிக்கு பம்பை வாத்தியங்களோடு தீர்த்த குடம் முளைப்பாரி அழைத்து ஆலயம் வந்து சேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5:30 மணிக்கு பாலாலயத்தில் உள்ள இறை சத்திகளை கும்பரூபமாக யாகசாலையில் எழுந்தருள் செய்து, முதல் காலை யாக பூஜை நடந்தது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு இரண்டாம் காலை ஆக பூஜை நடைபெற்றது. அதிகாலை 6.20 மணிக்கு ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ எட்டுகை அம்மன், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ வள்ளி தேவசேனா, சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி, ஸ்ரீ கருப்பனார், ஸ்ரீ கடகடப்பான் ஆகிய ஆலயங்களில் புனராவர்தன ஜூரனோர்தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News