சோழீஸ்வரர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்

குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் கிராமத்தில் அமைந்து உள்ள ஜெயங்கொண்ட சோழிஸ்வரர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் விமர்ச்சையாக நடைபெற்றது.

Update: 2024-01-25 10:32 GMT

கும்பாபிஷேகம்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் கிராமத்தில் அமைந்து உள்ள ஸ்ரீ ஜெங்கொண்ட சோழிஸ்வரர் கோயில் அமைக்கப்பட்டு உள்ள கருங்கற்களால் அமைக்கப்பட்டு உள்ள ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ முருகர் வள்ளி தெய்வசேனா ஸ்மேதா திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம் அதி விமர்ச்சையாக நடைபெற்றது. முன்னதாக கோயில் வளாகத்தில் சிறப்பு யாகம் அமைக்கப்பட்டு பட்டு வஸ்திரங்கள்,நவதானிய வகைகள்,வாசனை திரவியங்கள்,மூலிகை பொருட்கள்,மலர் வகைகள்,பழ வகைகள் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு யாக சாலை பூஜைகள் நடைபெற்றது . பின்னர் மேளதாளங்கள் முழுங்க நாதஸ்வரங்கள் கொண்டு புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோபுர கலசங்களுக்கு வேத மந்திரங்கள் முழுங்க மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் சேங்குன்றம் பஞ்சாயத்து தலைவர் குமரன்,ஊர் நாட்டாமை செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு 5 வகையான உணவினை அன்னதானமாக வழங்கப்பட்டது. இதில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News