பள்ளிபாளையம் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி

மகா சிவராத்திரியை முன்னிட்டு பள்ளிபாளையம் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2024-03-08 14:12 GMT
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அம்மன் கோவில் வீதி காவிரி கரையோரம் அமைந்துள்ள சுமார் 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜலகண்டேஸ்வரர் சிவன் ஆலயத்தில், மகா சிவராத்திரி விசேஷ நிகழ்வை ஒட்டி சிறப்பு வழிபாடு நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் பிரதோஷம் உள்ளிட்ட ஐந்து கால விசேஷ பூஜைகள் நடைபெற்றது. மேலும் சிறப்பம்சமாக சுமார் 30 அடி உயரத்தில் பிரமாண்ட சிவலிங்கம் அமைக்கப்பட்டிருந்தது பக்தர்களை பரவசப்படுத்தியது. சிறப்பு விசேஷ பூஜையில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் ,பூஜை நிறைவில் பிரசாதம் வழங்கபட்டது மற்றும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் உடனுக்குடன் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது...
Tags:    

Similar News