தான்தோன்றீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடு
ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்குகால சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
Update: 2024-03-09 03:40 GMT
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் கிராமத்தில் வாள் நெடுங்கண்ணி உடனாகிய தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. முற்கால சோழ மன்னர்களின் ஒருவரும் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவருமான கோச்செங்கட் சோழ மன்னனால் அமைக்கப்பட்ட மாடக் கோயில்களில் ஒன்றான இக்கோவிலில் சுவாமி தானாக தோன்றியதால் தான்தோன்றிஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
தேவாரப்பாடல் பெற்றதும் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் பிறந்து வளர்ந்து வாழ்ந்து சிவபெருமானை வழிபட்டு முக்தி அடைந்த தலம் ஆகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு இரவு நான்குகால பூஜைகள் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில்திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.