நாமக்கல்லில் நாளை ஈஷா யோகா மையம் சாா்பில் மகா சிவராத்திரி விழா
நாமக்கல்லில் நாளை நடைபெறவுள்ளா மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொள்ளும் பக்தா்கள், பொதுமக்கள் அனைவருக்கும் ஆதியோகி ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்படும்.
கோவை, வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ள ஈஷா யோக மையம், தனிமனித ஆன்மிக வளா்ச்சியை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. நாளை(மார்ச் -8) மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடைபெறும் இந்த விழாவில், ஆதியோகி திவ்ய தரிசனம், தியானங்கள், அருளுரை, பிரசித்தி பெற்ற கலைஞா்களின் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அந்த வகையில், வெள்ளியங்கிரி ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் நிகழ்வுகள் நேரலையாக நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பக்தா்கள் அனைவரும் இதில் இலவசமாக பங்கேற்கலாம். அனைவருக்கும் அன்னதானம், இருக்கை, குடிநீா், வாகன நிறுத்தம் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மகா சிவராத்திரி விழா நேரலையில் கலந்துகொள்ளும் பக்தா்கள், பொதுமக்கள் அனைவருக்கும் ஆதியோகி ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்படும் என நாமக்கல் ஈஷா யோகா மையம் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது.