சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பூஜை

பெரம்பலூர் சிவன் கோவிலில் நடைப்பெற்ற மகா சிவராத்திரி பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-03-09 07:49 GMT

சிவராத்திரி விழா

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் மார்ச் 8 ம் தேதி இரவு 7மணி அளவில் மகா சிவராத்திரி விழாதொடங்கியது. அதனை முன்னிட்டு பிரதோஷ கால அபிஷேகம் முடித்து முதல் காலம் பூஜை இரவு 7:45 மணியளவில் பால், தயிர், சந்தனம்,பழ வகைகள், வாசனை திரவியங்கள் உடன் அபிஷேகம் முடித்து சிறப்பு அலங்காரம் செய்து மங்கள வாத்தியம் முழங்க மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம், சுண்டல், பிரசாதம் வழங்கப்பட்டது,

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு கால பூஜைகள் இரவு முழுவதும் நடைபெற்று அதிகாலை 5 மணிக்கு மகா தீபாராதனையுடன் சிவராத்திரி பூஜை நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இதற்கான பூஜைகளை கௌரி சங்கர் சிவாச்சாரியார் மற்றும் முல்லை சிவாச்சாரியார் செய்தனர் , சிவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகளை லட்சுமணன் தக்கரர் செயல் அலுவலர் கோவிந்தராஜன் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News