மல்லூர் வீ.ஜி.விகாஸ் பப்ளிக் பள்ளி ஓவியப்போட்டியில் சாதனை
மல்லூர் வீ.ஜி.விகாஸ் பப்ளிக் பள்ளி கலாக்ரித்தி அகாடமி சார்பிலான ஓவியப்போட்டியில் சாதனை
By : King 24x7 Website
Update: 2024-02-15 13:29 GMT
சேலம், செவ்வாய்ப்பேட்டை கலாக்ரித்தி அகாடமி சார்பாக கடந்த 7.2.2024 அன்று நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் மல்லூர் வீ.ஜி.விகாஸ் பப்ளிக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில் வீ.ஜி.விகாஸ் பப்ளிக் பள்ளி மாணவ, மாணவிகள் மாநில அளவில் பல பரிசுகளைப் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியளித்த ஓவிய ஆசிரியை வினுப்பிரியா ஆகியோரை பள்ளி முதன்மைச் செயல் அலுவலர் திருநாவுக்கரசு, நிர்வாக அலுவலர் வினோத்குமார் மற்றும் பள்ளி முதல்வர் கணேஷ் ஆகியோர் பாராட்டினர்.