போச்சம்பள்ளி அருகே தாசில்தாருக்கு மாமூல்: சமூக வலைதளங்களில் வைரல்
போச்சம்பள்ளி அருகே மண் கடத்தப்பட்டதாகவும் அதில் தாசில்தார் ஆர்ஐ போலீசாருக்கு மாமூல் கொடுப்பதாக சமூக வளைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த தாதம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மாவத்தூர் ஏரி உள்ளது. சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியில் மண் மற்றும் மணல் களிமண் போன்ற கனிம வளங்கள் உள்ள நிலையில் இதனை அப்பகுதியில் உள்ள சிலர் கடந்த சில ஆண்டுகளாக இரவு வேலைகளில் டிப்பர் லாரிகளில் மண் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் அந்த மண்ணை சுமார் 60 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும் அதில் ஒரு நபர் 3 லட்சம் ரூபாய் கமிஷன் எடுத்துக்கொண்டு தங்கச் செயின் போட்டு உள்ளதாகவும், மேலும் இதில் தாசில்தார் முதல் ஆர்ஐ, விஏஓ போலீஸார் உட்பட பலருக்கு அவர்கள் கைவசம் உள்ளதாகவும் அவர்களுக்கு மாமூல் கொடுப்பதாகவும் போன்ற ஆடியோ அதில் பதிவாகி உள்ளது. அந்த ஆடியோவானது தாதம்பட்டி ஊராட்சி என்ற whatsapp குரூப்பில் பகிரப்பட்டு தற்பொழுது அந்த ஆடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் இரவு வேலைகளில் தொடர் மண் கடத்தலால் சாலைகள் சேதம் அடைந்து உள்ளதாகவும். மேலும் இந்த மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு முறையான ஆவணங்கள் மற்றும் பராமரிப்பு இன்றி இயக்கப்படுவதாகவும் இதனால் தொடர் விபத்துக்கள் ஏற்படுவதாகும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.