13 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது !

13 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2024-06-15 05:05 GMT

குட்கா 

பெரம்பலூரர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 13 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு நடைவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் வாலிகண்டபுரம் கிராமத்தில் கீழப்புலியூர் மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்த சோலமுத்து மகன் செல்வராஜ் என்பவர் தனது மளிகை கடையில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவகுமார், தலைமை காவலர்கள் அலெக்சாண்டர், முனீஸ்ராஜா முதல் நிலைக் காவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, கார்த்திக் ஆகியோர்கள் அடங்கிய குழுவினர் செல்வராஜை கைது செய்து மங்களமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement

மங்களமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து சுமார் 4000 ரூபாய் மதிப்புள்ள சுமார் 13 கிலோ ஹான்ஸ், குட்கா பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இதுபோன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும். என மாவட்ட காவல்துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News