கஞ்சா விற்பனை செய்த நபர் கைது
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே கஞ்சா விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
Update: 2024-03-25 08:20 GMT
கஞ்சா விற்றவர் கைது
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் சாலையில் ஆரணி காவல் நிலைய போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தகராறு செய்து ரகளையில் ஈடுபட்ட வினோத் (வயது 27) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வினோத் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.