காட்பாடி ரயில் நிலையத்தில் தங்க நகைகளை திருடியவர் கைது
காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில் பயணியிடம் 8 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 20.5 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற நபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில் பயணியிடம் 8 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 20.5 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற நபரை கைது செய்த ரயில்வே போலீசார். வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ஹால்பி ஷெரில் (40) என்பவர் கடந்த 15.12.2023 ஆம் தேதி பிருந்தாவன் விரைவு ரயிலில் காட்பாடி ரயில் நிலையம் வந்து அடைந்தார்.
அப்பொழுது அவர் ட்ராவல் பேக் மற்றும் பையை கொண்டு வந்துள்ளார் .அந்த பையில் ஹால்பி ஷெரில் 5 சவரன் மதிப்புள்ள ஒரு பிரேஸ்லெட், 12.5 சவரன் மதிப்புள்ள மூன்று கழுத்தில் அணியக்கூடிய தங்க நகைகள், 24 கிராம் மதிப்புள்ள தங்க மோதிரங்கள் இரண்டு என மொத்தம் 20.5 சவரன் தங்க நகைகளை வைத்திருந்துள்ளார். ஹால்பி ஷெரில் அசந்த நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அவரது பையை திருடி சென்றது தெரிய வந்தது இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஹால்பி ஷெரில் அருகில் உள்ள காட்பாடி இருப்பு பாதை காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா அவர்களிடம் புகார் அளித்தார். பு
காரின் பேரில் வழக்கு பதிவு செய்த காட்பாடி ரயில்வே இருப்புப்பாதை போலீசார் தலைமையில் இரண்டு தனி படைகள் அமைத்து சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து நகைகளை திருடி சென்றவரை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் தொடர் விசாரணையில் நகைகளை திருடி சென்ற நபர் காட்பாடி, வசந்தபுரம், வீடிகே தெருவை சேர்ந்த ஜார்ஜ் ( எ) சசிகுமார் என்பது தெரியவந்தது இதனை எடுத்து போலீசார் அவர் கைது செய்து அவனிடமிருந்து ரூபாய் 8,20,000 மதிப்புள்ள 20.5 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
ரயில் பணிகளின் பாதுகாப்பு சம்பந்தமான புகார் அளிக்க 24x7 இருப்புப் பாதை காவல் உதவி மைய எண் தொடர்பு கொள்ளலாம் என ரயில்வே இருப்பு பாதை போலீசார் தெரிவித்துள்ளனர்.