அரசு ஊழியர் வீட்டில் நகை திருடியவர் கைது
சேலம் சீலநாயக்கன்பட்டியில் அரசு ஊழியர் வீட்டில் நகை திருடியவர் கைது.;
Update: 2024-04-12 05:24 GMT
கைது
சேலம் சீலநாயக்கன்பட்டி பி.எம் நகரைச் சேர்ந்தவர் ஹசீனா பானு (வயது 30). தர்மபுரியில் மீன்வளத்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 26 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். நகைகள் திருடியதாக சேலம் கருங்கல்பட்டியைச் சேர்ந்த அப்பு (34) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.