அனுமதி இன்றி மணல் திருடிய நபர் கைது
குடவாசல் அருகே அனுமதி இன்றி மணல் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-07-03 12:58 GMT
மணல் கடத்தல்
குடவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கும்பகோணம் நன்னிலம் ரோடு பிளாவடி பிரிவு சாலை அருகில் அரசு அனுமதி இன்றி லாரி மூலம் மணல் திருடி சென்ற நாகப்பட்டினம் மாவட்டம் சேவுமூலை செட்டி தெருவை சேர்ந்த உலகநாதன் என்பவரின் மகன் மகாவிஷ்ணு என்பவரை போலீசார் கைது செய்தனர் . அரசு அனுமதி இன்றி மணல் திருடி செல்ல பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.