பெண்ணை அரிவாளால் வெட்டியர் கைது!
செய்துங்கநல்லூரில் கபடி விளைடியாட்டில் ஏற்பட்ட தகராறில், பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
Update: 2024-05-22 11:19 GMT
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர், சந்தையடி தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் ராக்குக்குட்டி (21), இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் மகேஷ் (31) என்பவருக்கும் கபடி விளையாடும் போது தகராறு ஏற்பட்டது. இதை ராசுகுட்டியின் தாயார் திருவரங்க செல்வி (55) என்பவர் கண்டித்து சண்டையை விலக்கி விட்டுள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த மகேஷ் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த திருவரங்கச் செல்வி நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குமார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து மகேஷை கைது செய்து விசாரணை நடத்திவருகிறார்.