மனைவி பிரிந்த சோகம் கணவன் தற்கொலை.
திருவள்ளூர் மாவட்டம்,திருவாலங்காடு பகுதியில் மனைவி பிரிந்த சோகத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-04-02 15:57 GMT
தற்கொலை
திருவாலங்காடு ஊராட்சி மணவூர் சாலையில் வசித்தவர் ஷ்யாம் சுந்தர், 22. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். காயத்ரி என்பவருடன் கடந்தாண்டு காதல் திருமணமானது. நேற்று முன்தினம் காலை கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் காயத்ரி கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றுள்ளார்.
இதனால், மனமுடைந்த ஷ்யாம் சுந்தர் இரவு வீட்டின் அறையில் இருந்த மின்விசிறியில் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவாலங்காடு போலீசார் சடலத்தை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.