வயிற்று வலியால் வாலிபர் தற்கொலை
திண்டுக்கல் அருகே தோமையார்புரத்தை சேர்ந்த வாலிபர் தீராத வயிற்று வலியால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Update: 2024-02-28 05:02 GMT
திண்டுக்கல் அருகே தோமையார்புரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (36). தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட இவர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இருப்பினும் வயிற்றுவலி குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ரமேஷ், நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.