தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை செய்த ஒருவர் கைது
கபிஸ்தலத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-05-09 15:59 GMT
கைது செய்யப்பட்டவர்
கபிஸ்தலத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை செய்த ஒருவர் கைது போதைப் பொருட்கள் பறிமுதல்,,,, கபிஸ்தலம் காவல் சரக பகுதிகளில் பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளர் அசோக் மேற்பார்வையில், கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது கபிஸ்தலம் பாலக்கரையில் மளிகை கடை நடத்தி வரும் மேல கபிஸ்தலம், காளியம்மன் கோவில் தெரு, மணிவேல் மகன் சுரேஷ் வயது 51 என்பவரது கடையில் சோதனை செய்த பொழுது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 135 பண்டல் ஹேண்ட்ஸ் மற்றும் 300 விமல் வாக்கு பாக்கெட்டுகளும் ஆக கூடுதல் ரூபாய் 6450 மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்து மளிகை கடை உரிமையாளரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணைத்து வருகின்றனர்,,,