விவசாய தோட்டத்தில் சாராயம் காய்ச்சியவர் கைது

துறையூர் அருகே நெட்ட வேலம்பட்டி பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் சாராயம் ஊரல் மற்றும் சாராயம் வைத்திருந்தவரை முசிறி மதுவிலக்கு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.;

Update: 2024-06-20 05:19 GMT
விவசாய தோட்டத்தில் சாராயம் காய்ச்சியவர் கைது

கைது செய்யப்பட்டவருடன் போலீசார்

  • whatsapp icon
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் நெட்ட வேலம்பட்டி பகுதியில் உள்ள ஒருவரது விவசாய தோட்டத்தில் சாராய ஊரல் வைத்திருப்பதாக முசிறி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது,தகவலின் அடிப்படையில் முசிறி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய காவல் ஆய்வாளர் செல்லத்துரை தலைமையிலான போலீஸார் நெட்ட வேலம்பட்டி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு விசாரணை மேற்கொண்டதில் நெட்ட வேலம்பட்டி நடுத்தெரு சேர்ந்த பொதியன் மகன் முத்துச்சாமி (50), என்பவரது தோட்டத்தில் சாராய ஊரல் மற்றும் சாராயம் இருப்பதை கண்டறிந்துள்ளனர். முத்துசாமி தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு தோட்டத்தில் உள்ள பம்பு செட்டில் 750 லிட்டர் சாராயம் ஊரல் மற்றும் 6 லிட்டர் சாராயம் இருந்ததை கைப்பற்றி முத்துசாமியை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர் பின்னர் துறையூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி துறையூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News