வீரபாண்டி பகுதியில் மதுபோதையில் பைக்கிற்கு தீ வைத்தவர் கைது

திருப்பூர் வீரபாண்டி பகுதியில் மதுபோதையில் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்தவரை போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-28 09:53 GMT

காவல் நிலையம்

திருப்பூர் வீரபாண்டி முத்துநகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் இவரது உறவினர் சக்திவேல் (37) குடும்பத்துடன்  குடியிருந்து வருகிறார். சக்திவேல் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்த வந்துள்ளார்.  இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சக்திவேல் மது போதையில் சரவணன் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த அவரது இருசக்கர ஸ்பிளெண்டர் பிளஸ்  வாகனத்தின் பெட்ரோல் டேங்கை திறந்து தீ வைத்துள்ளார். 

இதில் இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.  இது தொடர்பாக சரவணன் அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலிசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

Tags:    

Similar News