கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் கடத்தி வந்தவர் கைது
தடங்கம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை கடத்தி வந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-06-24 01:47 GMT
மதுவிற்றவர் கைது
தர்மபுரி மாவட்டம், மற்றும் சட்டமன்ற தொகுதி, நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட, தடங்கம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே நேற்று ஜூன் 23 மாலை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தர்மபுரி டேனிஷ்பேட்டை பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மகன் மணிகண்டன் என்பவர் கர்நாடக மாநிலத்திலிருந்து மது பாக்கெட்டுகளை கடத்தி வந்தது தெரிய வந்தது இதனை அடுத்து அதியமான் கோட்டை காவல்துறையினர் அவரை கைது செய்து மேலும் அவரிடமிருந்த மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.