8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கேரளாவில் கைது !

சமீபத்தில் 22 வருடமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை  கேரளாவில் கைது செய்தனர்.;

Update: 2024-07-09 04:51 GMT
8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கேரளாவில் கைது !

கைது

  • whatsapp icon

கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில்  சம்பந்தப்பட்டு நீதிமன்றத்தில் பிடிவாரண்ட்  பிறப்பிக்கப்பட்டு, தலைமறைவாக இருப்பவர்களை கைது செய்ய மாவட்ட  எஸ் பி, சுந்தரவர்த்தனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தலைமறைவாக உள்ளவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

சமீபத்தில் 22 வருடமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த திருப்பதி சாரத்தை சேர்ந்த கணேசன் என்ற வெள்ளை கணேசன் (51) என்பவர் கைது செய்யப்பட்டார். இதை போல் தொடர்ந்து தலைமறைவாக இருப்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ராமன் புதூரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் எட்டு ஆண்டுகளாக தலைமுறைவாக இருந்தார். அவர் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து  தனிப்படை எஸ் ஐ ஆறுமுகம் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ராஜேஷை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

Tags:    

Similar News