சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு போட்டி
சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு போட்டி - 800க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு;
By : King 24x7 Angel
Update: 2024-03-08 09:45 GMT
மஞ்சுவிரட்டு போட்டி
சிவகங்கை மாவட்டம், சாத்தரசன் கோட்டை அருகே செம்பனூரில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. அரசு அனுமதியுடன் நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 800க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 300க்கும் மேற்பட்ட காளையர்கள் களமிறங்கி விளையாடி வருகின்றனர். இதில் தமிழகத்தின் சிறந்த காளைகள் பங்கேற்று வீரர்களை காற்றில் பறக்க விட்டு குடியிருந்த ஆயிரக்கனக்கான ரசிகர்களின் கைதட்டலை பெற்றது. வீரர்களும் பல காளைகளை தழுவிச்சென்று கட்டில், சேர், பிரோ, அண்டா, போன்ற பரிசு பொருட்களை பெற்றனர். சில காளைகளுக்கு ஒரு ஏக்கர் நிலம், ரூ5 ஆயிரம் ரொக்கம் என அதிரடி பரிசுகளும் அறிவிக்கப்பட்டு போட்டி விருவிருப்பாக நடைபெற்றது.