கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி !

இருமதியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி - 350க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்பு

Update: 2024-03-11 06:27 GMT

மஞ்சுவிரட்டு போட்டி

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே இருமதி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலாருடைய அய்யனார் ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் கோவில் திருவிழா முன்னிட்டு மாபெரும் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 350 க்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 50க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர், மஞ்சுவிரட்டை ராமநாதபுரம் மன்னர் மாட்சிமை தாங்கிய ராஜா நாகேந்திர சேதுபதி, மதுரை நான்காம் தமிழ் சங்கத்தின் துணைத் தலைவர் துரை கருணாநிதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்,தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை தலைமையில் வருவாய் துறையினர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து தொழுவில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது .வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கும் வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது இதில் பார்வையாளர்கள் 26 பேர் காயமடைந்தனர். இதில் 2 பேர் படுகாயம் அடைந்து தேவகோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News