ஸ்ரீ மங்கள விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா
சாகுபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மங்கள விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
Update: 2024-01-25 09:49 GMT
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா சாகுபுரத்தில், வட திசை நோக்கி சாந்நித்யத்துடன் வீற்றிருக்கும் ஸ்ரீ மங்கள விநாயகர் ஆலய புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா (24-01-2024) புதன் கிழமை நடைபெற்றது. முன்னதாக கடந்த 21ம் தேதி மஹா கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் ஸ்ரீமஹா கணபதி ஹோமம், கோபூஜை, பூர்ணாஹூதி உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு மஹா கணபதி பூஜை, நவகிரஹ பூஜை, பிம்ப சாந்தி, மூலமந்திர ஹோமம், மஹாதீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விமானங்கள் மீது புனித நீர் உற்றப்பட்டு மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.