மங்கலதேவி கண்ணகி கோவில் திருவிழா: 23ஆம் தேதி உள்ளுர் விடுமுறை

மங்கலதேவி கண்ணகி கோவில் திருவிழாவை முன்னிட்டு 23ஆம் தேதி உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-04-16 16:04 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், மேலக்கூடலூர் (தெற்கு) கிராமம், மாநில எல்லையில் குமுளி அருகில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலின் சித்ரா பௌர்ணமி திருவிழா எதிர்வரும் 23.04.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெறவிருக்கிறது.

அதன் பொருட்டு தேனி மாவட்டத்தில் 23.04.2024 (செவ்வாய்க்கிழமை) அன்றைய தினம் வேலை நாளாக உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களும், அரசு சார்ந்த துறைகளுக்கும் மற்றும் அனைத்து விதமான கல்வி நிலையங்களுக்கும் 23.04.2024 அன்று உள்ளுர் விடுமுறை அறிவித்து ஆணையிடப்படுகிறது.

Advertisement

இந்த உள்ளுர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம்-1881 (Negotiable Instruments Act-1881) கீழ் வராது என்பதால், அன்றைய தினம் தேனி மாவட்டத்தில் தலைமை கருவூலம் (Huzur Treasury), சார்நிலை கருவூலகங்கள் மற்றும் அரசு பாதுகாப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன்,

செயல்படும். மேலும் மேற்குறிப்பிட்ட உள்ளுர் விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் 04.05.2024 அன்று மாற்று வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News