மணிக்கட்டிபுதூர் விநாயகர், பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
மணிக்கட்டிபுதூர் விநாயகர், பகவதியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள மணிக்கட்டிபுதூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள உள்ள ஸ்ரீ விநாயகர் பகவதி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் மற்றும் முளைப்பாரி எடுத்துவரப்பட்டு, ஹோம குண்டங்கள் மூலம் தீப ஆராதனை செய்து கணபதி பூஜை உடன் நேற்று மாலை சாமி அலங்கரிக்கப்பட்டது.
இதில் தொடர்ந்து நேற்று காலை ஹோம குண்டங்கள் மந்திரங்கள் ஓத புனித நீர் கலசத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, புனித நீா் கலசத்தை கோயிலைச் சுற்றி எடுத்து வந்து கோயில் கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனா். பின்னர் அங்கிருந்த பக்தா்கள் மீதும் புனித நீா் தெளிக்கப்பட்டது.இந்த மகா கும்பாபிஷேக விழாவில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.