மணிமங்கலம் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி துார்வார கோரிக்கை

மணிமங்கலம் ஏரியை துார்வாரி ஆழப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2024-02-08 15:48 GMT

மணிமங்கலம் எரி 

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் தாலுகா, மணிமங்கலம் ஏரி 0.25 டி.எம்.சி., கொள்ளளவும், 18.60 அடி நீர்மட்டம் உடையது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாவது பெரிய ஏரியாக உள்ளது.

புறநகர் பகுதியில் மணிமங்கலம் உள்ளதால், கோடைக்காலத்தில் இங்கிருந்து சென்னைக்கு எளிதாக தண்ணீர் எடுத்துச் செல்ல முடியும். தற்போது, இந்த ஏரி நீரை பயன்படுத்தி மணிமங்கலம், கரசங்கால், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்களில் 1,000 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்படுகிறது.

அதிக நீர்வரத்து உடைய இந்த ஏரி, வட கிழக்கு பருவமழை காலங்களில் விரைவாக நிரம்பி, கலங்கள் வழியே 1 டி.எம்.சி.,க்கு மேல் உபரி நீர் வெளியேறி, வரதராஜபுரம் குடியிருப்பு பகுதியை சூழ்வதால், அங்கு வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.

ஏரியை ஆக்கிரமித்து பாரதி நகர், புஷ்பகிரி, காந்தி நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி ஆழப்படுத்தினால், அரை டி.எம்.சி., வரை தண்ணீரை தேக்கி வைக்க முடியும். எனவே, மணிமங்கலம் ஏரியை துார்வாரி ஆழப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்."

Tags:    

Similar News