சாலை பாதுகாப்பு வார விழாவில் மஞ்சப்பை விழிப்புணர்வு

கிருஷ்ணகிரியில் ரோட்டரி கிளப், தேசிய மாணவர் படை மற்றும் தேசிய பசுமை படை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-01-25 14:49 GMT

மஞ்சள் பை விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி மாநகர் ரோட்டரி கிளப், தேசிய மாணவர் படை மற்றும் தேசிய பசுமை படை ஆகியவை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சி முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி கிருஷ்ணகிரி மாநகரை தூய்மை செய்தல் நெகிழிப் பைகளை அகற்றுதல் மரக்கன்றுகள் நடுதல் மஞ்சப்பை விழிப்புணர்வு செய்தல் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல் ஆகியவை நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் தலைவர் ஆனந்த் தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்கத்தின் உதவி ஆளுநர் சிவக்குமார் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார் இந்த பேரணி கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வழியாக டான்சி தொழிற்பேட்டை பகுதியில் முடிவடைந்தது இப்பேரணியில் 11 சிக்னல் கம்பெனியை சார்ந்த 120 தேசிய மாணவர் படை அலுவலர்கள் கலந்து கொண்டனர். பிறகு டான்சி தொழிற்பேட்டை வளாகம் மற்றும் பூங்கா பகுதிகளை மாணவர்கள் தூய்மைப்படுத்தினார்கள்.

500 கிலோ எடையுள்ள நெகிழிப்பைகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன தொழிற் பேட்டை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

Tags:    

Similar News