மேலூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு

மேலூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை, இளைஞர்கள்.வீரத்துடன் அடக்கினர்.

Update: 2024-06-13 02:06 GMT

மேலூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை, இளைஞர்கள்.வீரத்துடன் அடக்கினர்.


மேலூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு சீறிப்பாய்ந்த காளைகள் , வீரத்துடன் அடக்கிய இளைஞர்கள். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பூமங்கலப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சோலை ஆண்டவர்,ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய உற்சவ திரு விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. 9 பேர் அடங்கிய வீரர்கள் ஒரு அணி மாடுபிடி வீரர்களாகவும், 1 காளையை மைதானத்தில் வட கயிற்றில் கட்டி அவிழ்த்துவிடுவர்.

குறிப்பிட்ட 25 நிமிடங்களுக்குள் காளையை மாடுபிடி வீரர்கள் அடக்கினால் மாடுபிடி வீரர்கள் வென்றதாகவும் இல்லை என்றால் காளை வென்றதாக அறிவிக்கப்படும் இதுவே போட்டியின் விதிமுறை. இதில் 15 அணியை சேர்ந்த மாடுபிடி அணி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து மொத்தம் 15 மாடுகள் கலந்து கொண்டன.

வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசு தொகையும், வெள்ளி காசு, அண்டா தென்னங்கன்று போன்ற பரிசுகளை விழா குழுவினர் வழங்கினர். இந்த போட்டியை காண சுற்றுப்புற கிராமங்களான கொட்டாம்பட்டி, வெள்ளாளப்பட்டி, மணப்பச்சேரி, பள்ளப்பட்டி, சிங்கம்புணரி, நத்தம், துவரங்குறிச்சி ஆகிய பகுதியில் இருந்து மக்கள் கண்டு களித்தனர் நிகழ்ச்சியை பூமங்களப்பட்டி ஊர் பொதுமக்கள், இளைஞர் ஏற்படு செய்திருந்தனர்.

Tags:    

Similar News