மஞ்சுவிரட்டு போட்டி

சிங்கம்புணரி அருகே கோவில் திருவிழாவினை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

Update: 2024-04-01 09:00 GMT

சிங்கம்புணரி அருகே கோவில் திருவிழாவினை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலபட்டியில் பட்டத்தரசி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது.

இதில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு, ஆங்காங்கே வயல் வெளிகளில் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டது. சீறிப்பாய்ந்த காளைகளை வாலிபர்கள் அடக்க முயன்றதில், காளைகள் முட்டி மாடுபிடி வீரர்கள் பார்வையாளர்கள் என 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மஞ்சுவிரட்டு போட்டியை காண சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து மஞ்சுவிரட்டு போட்டியை கண்டுகளித்தனர். அனுமதியின்றி மஞ்சுவிரட்டை நடத்திய ராஜ்குமார், ஆசைத்தம்பி , தினகரன் உள்ளிட்ட 9 பேர் மீது சிங்கம்புணரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

Tags:    

Similar News