மாரியம்மன் கோவில் மண்டல பூஜை: பக்தர்கள் மாவிளக்கு ஊர்வலம்
மாரியம்மன் கோவில் மண்டல பூஜை கலந்து கொள்ள வேடம் அணிந்து ஊர்வலமாக பக்தர்கள் சென்றனர்.;
வேடம் அணிந்த பக்தர்கள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த இரா.புதுப்பட்டி துலுக்க சூடாமணியம்மன் மஹா கும்பாபிஷேக விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் என நாள்தோறும் ஸ்ரீ துலுக்க சூடாமணி அம்மனுக்கு அலங்கார பூஜைகள் நடந்து வந்தது .
மேலும் இவ்விழாவை முன்னிட்டு 48 -ஆம் நாள் மண்டல பூஜை ஆனது தொடர்ந்து நடைபெற்றது. வடுகம் உப்பிலிய நாயக்கர் சமூகத்தின் சார்பாக வடுகத்திலிருந்து மாவிளக்கு,தேங்காய் பழம் தட்டு என 100 மேற்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் மாரியம்மன், காளியம்மன், வேசமிட்டு ஊர்வலமாக ஆர்.புதுப்பட்டி உள்ள துலுக்க சூடாமணி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது..