பழநி மாரியம்மன் கோயிலில் மாரியம்மன் மாசி திருவிழா திருக்கல்யாணம் !
பழநி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-28 05:57 GMT
திருக்கல்யாண திருவிழா
பழநி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா கடந்த பிப்.9ம் தேதி முகூர்த்தக்கால் ஊன்றுதலுடன் துவங்கியது. பிப்.13ம் தேதி இரவு 7.30 மணிக்கு மேல் திருக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பிப்.20ம் தேதி கொடியேற்றம், பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி மாரியம்மனுக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களின் குலவை முழங்க மாரியம்மனுக்கு மங்கல நாண் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து மாவிளக்கு பூஜை நடந்தது. இன்று மாலை 4.30 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.பிப்.29ம் தேதி கொடி இறக்குதலுடன் விழா முடிவடைகிறது.