சிங்கம்புணரியில் மாசி களரி திருவிழா

சிங்கம்புணரியில் மாசி களரி திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Update: 2024-02-21 05:50 GMT

மாசி களரி திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே ராயன்கருப்பன் கோவிலில் இரவு முழுவதும் மாசிக்களரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விரதம் இருந்த பக்தர்கள் சிங்கம்புணரி முழுவீரன் தெருவில் உள்ள கோயில் வீட்டில் இருந்து சுவாமி கரகம், அறிவாள், உள்ளிட்ட ஆயுதங்களுடன் மேளதாளம் முழங்க பக்தி பரவசத்துடன் தலையில் சுமந்து கருப்பசாமி ஆட்டத்துடன், வான வேடிக்கைகள், பட்டாசுகள் வெடித்து புது வயல் பகுதியில் உள்ள கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கே கிடா பலியிட்டு சாமி ஆட்டம் நடைபெற்றது. பாரம்பரியமாக அறிவாளில் ஏறி நின்று சாமி அருள்வாக்கு கூறியும், ஆனி செருப்பு அணிந்துகொண்டும் கையில் தீப்பந்தம் ஏந்தியும் சாமி ஆட்டம் இரவு முழுதும் விடிய விடிய நடைபெற்ற இத் திருவிழாவில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News