அருள்மிகு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா
அருள்மிகு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு இன்று கோவிலின் சுவாமி பிரகாரத்தில் எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
Update: 2024-03-01 06:05 GMT
அருள்மிகு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா இன்று கோவிலின் சுவாமி பிரகாரத்தில் எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்வு வேதாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க மேல வாக்கியங்களுடன் நடைபெற்றது. உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் ஆடி திருக்கல்யாணம், மாசி மகா சிவராத்திரி உள்ளிட்ட இரண்டு திருவிழாக்கள் வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் மாசி மாதத்தை ஒட்டி இன்று ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் சுவாமி சன்னிதானம் எதிரே அமைந்துள்ள தங்க கோபுரத்தில் வேதாச்சாரியார்களின் மந்திரங்கள் முழங்க மேல வாக்கியங்களுடன் மகா சிவராத்திரி திருவிழாவின் முதல் நாளான இன்று கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது. அதன் பின்னர் ராமநாத சுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றன, இந்த நிகழ்வில் ராமநாதசுவாமி திருக்கோவில் அரசு துறை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்று சென்றனர்.