அங்காளம்மனுக்கு மாசி மாத சிறப்பு பூஜை

சேலம் மாவட்டம், கல்வடங்கம் அங்காளம்மன் கோவிலில் மாசி மாத சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-02-16 02:22 GMT

மாசி திருவிழா

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் மாசி முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு அருள்மிகு அங்காளம்மனுக்கு பால்,தயிர், சந்தனம்,திருமஞ்சனம்,பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர் வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு அங்காளம்மன் சுவாமியை வழிபட்டு சென்றனர்.

Tags:    

Similar News