ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் மாசி மாத தெப்பத் திருவிழா இன்று தொடங்கியது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் மாசி மாத தெப்பத் திருவிழா இன்று தொடங்கியது.
Update: 2024-02-25 06:09 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் சுமார் 7 வருடங்களுக்கு பிறகு மாசி மாத தெப்பத்திருவிழா இன்று தொடங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலானது 108 வைணவ ஸ்தலங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவதாகும். இக்கோவிலில் மார்கழி மாத உற்சவம், ஆடிப்பூர திருத்தேரோட்டம் மற்றும் பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்வுகள் வெகு விமர்சியாக கொண்டாடப்படும். இவைகளை தொடர்ந்து மாசி மாத தெப்பத்திருவிழாவும் இங்கு வெகு விமரிசியாக கொண்டாடப்படும். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட தெப்ப உற்சவம் சுமார் 7 வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த உற்சவமானது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள திருமுக்குளம் என்ற குளத்தில் நடைபெறும். முதல் நாளான இன்று ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்க மன்னார் தெப்பத்தேரில் எழுந்துள்ள தேரானது திருமுக்கூலத்தை மூன்று முறை சுற்றி வலம் வந்தது. குளத்தில் நான்கு கரைகளிலும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோவிந்தா கோவிந்தா எனகோஷம் முழங்க ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீரங்கமன்னாரை தரிசனம் செய்தனர். சுமார் 7 வருடங்களுக்கு பின்பு நடைபெறும் உற்சவம் என்பதால் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.