சிவகாசியில் களைகட்டிய மாசி பொங்கல் முளைப்பாரி ஊர்வலம்
சிவகாசியில் களைகட்டிய மாசி பொங்கல் விழாவில் ஏராளமான பெண்கள் நேர்த்தி கடன் செலுத்திய முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில்,மாசி மாதத்தில் சிறப்பாக நடைபெறும் திருவிழாக்களில் மாசி தெருக்கட்டு பொங்கல் விழா மிகவும் சிறப்பானதாகும்.
இந்த தெருக்கட்டு பொங்கல் விழா என்பது,சிவகாசியிலுள்ள தெருக்களில் கொண்டாடப்படுகிறது.மாசி மாதம் பிறந்தவுடன்,ஒவ்வொரு தெருவிலும் மையப் பகுதியில் சிறிய பீடம் அமைக்கப்பட்டு அதனை முத்தாலம்மனாக வழிபட்டு வரும் நிகழ்ச்சி 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.
இந்த ஆண்டு மாசி மாதம் பிறந்த முதலே தெருக்கட்டு பொங்கல் அறிவிக்கப்பட்டு,தெருக்களில் காப்பு கட்டப்பட்டு நிகழ்ச்சிகள் துவங்கியவுடன்,பெண்கள் விரதமிருந்து நேர்த்திக்கடன் போட்டு முளைப்பாரி வளர்த்து,இரவு முத்தலாம்மன் சுவாமி முன்பு சிறுமிகள் மற்றும் பெண்கள் கும்மிப்பாட்டு பாடுவதை தொடர்ந்து,௭
நாட்களும் முத்தாலம்மன் கோவில் முன்பு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும், பொங்கலின் முக்கிய நிகழ்ச்சியான அம்மனுக்கு சீர்வரிசைப்பொருட்கள்தேங்காய்பழங்கள் அடங்கிய தட்டுகளுடன் தெருக்களில் ஊர்வலமாக சென்று ,காவல் தெய்வமாக இருக்கும் கருப்பசாமி கோவில், ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில், ஸ்ரீமாரியம்மன் கோவில்களுக்கு மேளதாள முழக்கங்களுடன் சென்று சுவாமிகளை வணங்குவார்கள்.
பின்னர் நேர்த்திக்கடன் செலுத்திய முளைப்பாரி கரைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்படும்.