வெகுஜன பூஜை - புதுக்கோட்டை பாரதிய ஜனதா கட்சியினர் புதுமை வழிபாடு!

Update: 2024-01-12 09:58 GMT
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற, ஆஞ்சநேயர் பிறந்த நாளில் வெகுஜன பூஜை நடைபெற்றது.  அயோத்தி ஶ்ரீராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஜனவரி-22ம் தேதி வெகு சிறப்பாக நடைபெறுவதற்காக, இன்றைய அனுமத் ஜெயந்தி அமாவாசை தினத்தில் புதுக்கோட்டை பிருந்தாவனம் வீரஆஞ்சநேயர் ஆலயத்தில் பாரதிய ஜனதாகட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பொது செயலாளர் ஏவிசிசி கணேசன் தலைமையில் வெகுஜன வழிபாடும்,சிறப்பு பூஜைகளும் நடத்தி பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பிரசாதங்கள் வினியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை நகர பாஜக தலைவர் லெட்சுமணன் மாநில தரவு மேலாண்மை பிரிவு செயலாளர் கார்த்திகேயன், உள்ளாட்சிபிரிவு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் ரவிகுமார், அமைப்புசாரா மாவட்ட தலைவர் நடராஜன், செயற்குழு உறுப்பினர் ராதாகபே ரவி,ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகி குமார் மற்றும் பாஜக நகர நிர்வாகிகள், கிளைத்தலைவர்கள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News