குருக்கத்தியில் மதிசுடர் ஆயத்த ஆடை திறப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் குருக்கத்தியில் மதிசுடர் ஆயத்த ஆடை உற்பத்தி அலகு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ்திறந்து வைத்தார்.

Update: 2024-02-13 08:55 GMT

நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

 நாகப்பட்டினம் மாவட்டம். கீழ்வேளூர் வட்டாரத்தில் தழிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கதத்தின் மூலம் 2021 2022 ஆம் ஆண்டு வட்டார வணிக வள மையம் அமைக்கப்பட்டது.

வட்டார வணிக வள மையமானது வட்டார அளவில் பண்ணைசாரா தொழில் முனைவோர்களை கண்டறிந்து அவர்களுக்கு தொழில் திட்டம் தயாரித்தல், தொழில் மேம்பாட்டு நிதி உதவி அளித்தல், தொழில் நுட்ப ஆலோசனை வழங்குதல், பிற அரசு நல திட்டங்களுடன் பயனாளிகளை இணைத்தல், தொழில் முணைவோரை தொடர்ந்து கண்காணித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இம்மையத்தில் 6 சமுதாய வள பயிற்றுநர்கள் பணியாற்றுகின்றனர் கீழ்வேளூர் வட்டாரத்தில் வட்டார வணிக வள மையம் மூலம் குருக்கத்தி, 119 அனக்குடி, அகரக்கடம்னூர் ஆகிய ஊராட்சிகளில் தையல் சிறு தொழில் தொகுப்பு மகளிர் தொழில் முனைவோரை கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்தொழில் தொகுப்பிற்கு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் தலா ரூ.250000 வீதம் வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பிலிருந்து முதல் கட்டமாக 10 தொழில் முனைவோர்களை தேர்வு செய்து மதி சுடர் ஆயத்த ஆடை உற்பத்தி அலகு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார்.

இதனை தொடந்து மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.50,000/- வீதம் 20 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.10 இலட்சம் தொழில் கடன் வழங்கினார். பின்னர் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் கண்காட்சியினை பார்வையிட்டார். இந்நிகழ்சியில் திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்) முருகேசன், உதவி திட்ட அலுவலர்கள் காமராஜ், சந்திரசேகர், வட்டாட்சியர் ரமேஷ்,, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேவதி கீழ்வேளூர் செயல் அலுவலர் குதன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News