ஹெச்எம்எஸ் தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா

தூத்துக்குடியில் ஹெச்எம்எஸ் தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-05-02 17:32 GMT

மே தின கொண்டாட்டம்

தூத்துக்குடி துறைமுக யுனைடெட் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் ஹெச்எம்எஸ் சார்பில் பீச் ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் மே தின விழா கொண்டாடப்பட்டது. சங்கத்தின் செயல் தலைவர் தேவதாஸ் மே தின கொடியை ஏற்றினார். பொதுச்செயலாளர் ஜி.ஜான் கென்னடி ராஜன் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துக்களை கூறி இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தலைவர் கிளின்டன் பெர்னாண்டோ, செயலாளர்கள் சரவணகுமார், ஹரிஹரசுதன், சண்முகவேல், மோசஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News