நாகர்கோவிலில் இளம்பெண் மகளுடன் மாயம் !
நாகர்கோவிலில் இளம்பெண் மகளுடன் மாயம் - போலிசார் விசாரணை;
By : King 24x7 Angel
Update: 2024-06-24 12:22 GMT
மாயம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் துரை. இவரது மனைவி பாப்பா (30). இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. இரண்டரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் வீட்டிலிருந்து பாப்பா தனது மகளுடன் மாயமாகி உள்ளார். மாயமான இருவரையும் துரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். எங்கு தேடியும் அவர்கள் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து பாப்பாவின் தந்தை சுடலை என்பவர் நேசமணி நகர் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணையும் அவரது மகளையும் தேடி வருகிறார்கள்.