பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க உள்ள கரும்பு குறித்து ஆட்சியர் ஆய்வு

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட உள்ள கரும்பு குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கரும்பு தோட்டத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்

Update: 2024-01-10 01:14 GMT

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க உள்ள கரும்பு குறித்து ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவாவடுதுறை கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குதற்கான கரும்பு கொள்முதல் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு, கரும்பின் தரத்தினை ஆய்வு செய்து, விவசாயிகளிடம் கலந்துரையாடினார்கள். தொடர்ந்து, மாதிரிமங்கலம் ஊராட்சியில் நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக தயார் நிலையில் உள்ள அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் தரத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

பின்னர், குத்தாலம் பேரூராட்சி இராஜகோபாலபுரம் பகுதியில் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இவ்வாய்வின்போது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் தரவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபால், வட்டாட்சியர் சித்ரா, தனி வட்டாட்சியர் (குடிமை பொருள் வழங்கல்) பிரான்ஸ்வா உடன் இருந்தனர்.

Tags:    

Similar News