மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு உடல் நல குறைவு மருத்துவமனையில் அனுமதி
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ பி மகாபாரதி உடல்நிலை குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-27 09:05 GMT
மாவட்ட ஆட்சியர்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிலையில் மதியம் முகாம் அலுவலகம் சென்றவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அவரை தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.